பக்கங்கள்

செவ்வாய், 21 அக்டோபர், 2025

Bible Festivals || Richard George Muller

 Festivals




https://youtu.be/N1lPUXdqkco

https://youtu.be/N1lPUXdqkco


1. பஸ்கா பண்டிகை  

(Exodus 12:1-14 ; Leviticus 23:5)

ஆபிப் மாதம் - 14ம் தேதி --- 1 Day

எகிப்திலிருந்து விடுதலையை நினைவுகூற ..... 

எகிப்தின் முதற் பிறந்தோர் கொலையின் போது இஸ் ரவேலின் முதற் பிறந்தோரை விடுவித்துஎபிரெய மக்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுத லையளித்தது. )


யாத்திராகமம்‬ ‭12‬:‭1‬-‭14‬


  1. கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
  2. இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம்மாதமாயிருப்பதாக.
  3. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கிஇந்த மாதம் பத்தாம் தேதியில்வீட்டுத்தலைவர்கள்வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாகஒவ்வொருவரும் ஒவ்வொருஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்.
  4. ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமானபேர்களாயிராமற்போனால்அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடையஅயல்வீட்டுக்காரனும்தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒருஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம்பார்த்துஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
  5. அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒருவயதுள்ளதுமாய் இருக்கவேண்டும்செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம்.
  6. அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்துஇஸ்ரவேல் சபையின்ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,
  7. அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துதாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள்இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
  8. அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டுபுளிப்பில்லா அப்பத்தோடும்கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.
  9. பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்லஅதின் தலையையும் அதின்தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப்புசிப்பீர்களாக.
  10. அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல்விடியற்காலம் மட்டும் அதிலேமீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.
  11. அதைப் புசிக்கவேண்டிய விதமாவதுநீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும்உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும்உங்கள் கையில் தடிபிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்அது கர்த்தருடைய பஸ்கா.
  12. அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய்எகிப்துதேசத்திலுள்ளமனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும்முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணிஎகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்நானே கர்த்தர்.
  13. நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்அந்தஇரத்தத்தை நான் கண்டுஉங்களைக் கடந்துபோவேன்நான் எகிப்து தேசத்தைஅழிக்கும்போதுஅழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
  14. அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவதுஅதைக் கர்த்தருக்குப்பண்டிகையாக ஆசரிப்பீர்களாகஅதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகஆசரிக்கக்கடவீர்கள்.

‭‭


லேவியராகமம்‬ ‭23‬:‭5‬


முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிய வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும்,”

‭‭




2.புளிப்பில்லாத அப்பப் பண்டிகை

(Exodus 12:15-20 ; Leviticus 23:6-8)

ஆபிப் மாதம் - 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை ---  7 Days 

எகிப்திலிருந்து புறப்படுதலை நினைவுகூற )


யாத்திராகமம் 12:15-20


  1. புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள்முதலாம் நாளில்தானேபுளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்முதலாம் நாள் தொடங்கி ஏழாம்நாள்வரைக்கும் புளித்த அப்பம்புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்துஅறுப்புண்டுபோவான்.
  2. முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும்ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும்இருக்கவேண்டும்அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாதுஅவரவர்சாப்பிடுகிறதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம்
  3. புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாகஇந்த நாளில்தான் நான் உங்கள்சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்ஆகையால்உங்கள்தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்
  4. முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதிசாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்
  5. ஏழுநாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாதுஎவனாகிலும்புளிப்பிடப்பட்டதைப் புசித்தால்அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும்அந்த ஆத்துமாஇஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான்
  6. புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம்புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்


லேவியராகமம்‬ ‭23‬:‭6‬-‭8‬


  1. அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலேகர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய்இருக்கும்ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்.
  2. முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்அதிலே சாதாரணமான யாதொருவேலையும் செய்யவேண்டாம்.
  3. ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.”

‭‭



3.முதற்பலன் பண்டிகை 

(Leviticus 23:9-14)

ஆபிப் மாதம் - 16ம் தேதி--- 1 Day

(வாற்கோதுமையறுப்பின் தொடக்கம்/ அறுவடையின் முதற்பலன் காணிக்கை)


லேவியராகமம்‬ ‭23‬:‭9‬-‭14‬ 


  1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்நான் உங்களுக்குக்கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்துஅதின் வெள்ளாண்மையை அறுக்கும்போதுஉங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில்கொண்டுவரக்கடவீர்கள்.
  3. உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படிஆசாரியன் அந்தக்கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்குமறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.
  4. நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,
  5. கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும்திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
  6. உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும்அப்பமும்வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாகஇது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள்தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.”

‭‭



4. பெந்தகோஸ்து பெருநாள் / அறுப்புக்கால / வாரங்களின் பண்டிகை 

(Exodus 23:16, 34:22 ; Leviticus 23:15-21)

சீவான் மாதம் - 6ம் தேதி --- 1 Day

(பெந்தெகொஸ்தே நாள் )

(வாற்கோதுமையறுப்பின் முடிவும் கோதுமை அறு வடையின் தொடக்கமும்)


யாத்திராகமம்‬ ‭23‬:‭16‬ ‭


  1. நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்காலபண்டிகையையும்வருஷமுடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத்தீர்ந்தபோதுசேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.

‭‭


யாத்திராகமம்‬ ‭34‬:‭22‬


  1. கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும்வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.

‭‭


லேவியராகமம்‬ ‭23‬:‭15‬-‭21‬ 


  1. நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டுஎண்ணத்துவக்கிஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,
  2. ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணிகர்த்தருக்குப் புதியபோஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.
  3. நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப்பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள்வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,
  4. அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாகஒருவயதான பழுதற்ற ஏழுஆட்டுக்குட்டிகளையும்ஒரு காளையையும்இரண்டு ஆட்டுக்கடாக்களையும்கர்த்தருக்குச்சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும்பானபலியையும் செலுத்தி,
  5. வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும்ஒருவயதான இரண்டுஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் இடக்கடவீர்கள்.
  6. அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூடகர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்கர்த்தருக்குப்பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.
  7. அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்அதிலேசாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாதுஇது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம்உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.

‭‭



5.எக்காள பண்டிகை

(Numbers 29:1-6) ( Leviticus 23:23-25)

ஏத்தானீம் மாதம் - 1ம் தேதி --- 1 Day

(ஏழாம் மாதத்தின் தொடக்க நாள்)


எண்ணாகமம்‬ ‭29‬:‭1‬-‭6‬ 


  1. ஏழாம் மாதம் முதல் தேதி பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவதுஅதில் சாதாரணமானயாதொரு வேலையும் செய்யலாகாதுஅது உங்களுக்கு எக்காளமூதும்நாளாயிருக்கவேண்டும்
  2. அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒருகாளையையும்ஒரு ஆட்டுக்கடாவையும்ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
  3. அவைகளுக்கு அடுத்த போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலேகாளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும்ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
  4. ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
  5. உங்கள் பாவநிவிர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி,
  6. மாதப்பிறப்பின் சர்வாங்கதகனபலியையும்அதின் போஜனபலியையும்தினந்தோறும் இடும்சர்வாங்கதகனபலியையும்அதின் போஜனபலியையும்அவைகளின் முறைமைக்கேற்றபானபலிகளையும் அன்றிஇவைகளையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையானசர்வாங்கதகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.

‭‭


லேவியராகமம்‬ ‭23‬:‭23‬-‭25‬


  1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்உங்களுக்கு ஏழாம் மாதம்முதலாந்தேதி எக்காளச்சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபைகூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக.
  3. அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல்கர்த்தருக்குத் தகனபலிசெலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.

‭‭


6.பாவ நிவாரண பண்டிகை 

(Leviticus 23:27-32 ; Numbers 29:7-11)

ஏத்தானீம் மாதம் - 10ம் தேதி --- 1 Day

(தேசத்திலிருந்து மக்களின் பாவம் துடைத்து விடுதல்)


லேவியராகமம் 23:27-32


  1. அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும்பரிசுத்தநாளுமாயிருப்பதாகஅப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்திகர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்
  2. அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகப் பாவநிவிர்த்திசெய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால்அதிலே யாதொரு வேலையும்செய்யவேண்டாம்
  3. அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்குஅறுப்புண்டுபோவான்
  4. அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால்அந்த ஆத்துமாவை அவன்ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்
  5. அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள்தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்தியகட்டளை
  6. அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வு நாள்அதில் உங்கள் ஆத்துமாக்களைத்தாழ்மைப்படுத்தவேண்டும்அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கிமறுநாள்சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்


எண்ணாகமம் 29:7-11


  1. இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவதுஅதிலே நீங்கள் யாதொரு வேலையும் செய்யாமல்உங்கள் ஆத்துமாக்களைத்தாழ்மைப்படுத்தி,
  2. கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும்ஒருஆட்டுக்கடாவையும்ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்
  3. அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப்பத்தில் மூன்று பங்கையும்அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்
  4. ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்
  5. பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்திபாவநிவாரணபலியையும்நித்திய சர்வாங்கதகனபலியையும்அதின் போஜனபலியையும்அவைகளின்பானபலிகளையும் அன்றிஇவைகளையும் செலுத்தக்கடவீர்கள்


7.கூடாரப் பண்டிகை / சேர்ப்புக்கால பண்டிகை 

(Leviticus 23:33-36 , 39-43)

ஏத்தானீம் மாதம் - 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை ---- 7 Days

(வனாந்தரத்தில் கிடைத்த தேவ பராமரிப்பும் நடத்துதலும்)


லேவியராகமம் 23:33-43


  1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி
  2. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்அந்த ஏழாம் மாதம்பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும்கூடாரப்பண்டிகையாயிருப்பதாக
  3. முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்அதிலே சாதாரணமான யாதொரு வேலையும்செய்யலாகாது ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்எட்டாம் நாள்உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்அது ஆசரிக்கப்படும் நாள்அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்
  4. முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்அதிலே சாதாரணமான யாதொரு வேலையும்செய்யலாகாது ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்எட்டாம் நாள்உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்அது ஆசரிக்கப்படும் நாள்அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்
  5. நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிரநீங்கள் கர்த்தருக்குப் படைக்கிறஉங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர
  6. நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிபோஜனபலிஇரத்தபலிபானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடி வந்துபரிசுத்தமாய்ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே
  7. நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல்கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்முதலாம் நாளிலும் ஓய்வுஎட்டாம்நாளிலும் ஓய்வு
  8. முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும்தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்துஉங்கள்தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்
  9. வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்இது உங்கள்தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளைஏழாம் மாதத்தில் அதைஆசரிக்கவேண்டும்
  10. நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோதுஅவர்களைக்கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு
  11. ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும்கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்என்றார்



8.அர்ப்பணிப்பு பண்டிகை / பிரதிஷ்டை பண்டிகை 

John 10:22-29

9ம் மாதம் 


யோவான் 10:22-29


  1. பின்பு எருசலேமிலே தேவாலயப்பிரதிஷ்டைபண்டிகை வந்ததுமாரிகாலமுமாயிருந்தது
  2. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்
  3. அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டுஎதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச்சந்தேகம் உண்டாக்குகிறீர்நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும்என்றார்கள்.
  4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாகஅதை உங்களுக்குச் சொன்னேன்நீங்கள்விசுவாசிக்கவில்லைஎன் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளேஎன்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
  5. ஆனாலும்நான் உங்களுக்குச் சொன்னபடியேநீங்கள் என் மந்தையின்ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்
  6. என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறதுநான் அவைகளை அறிந்திருக்கிறேன்அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
  7. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்அவைகள் ஒருக்காலும்கெட்டுப்போவதில்லைஒருவனும் அவைகளை என் கையிலிருந்துபறித்துக்கொள்ளுவதுமில்லை.
  8. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்அவைகளை என்பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.



9.பூரீம் பண்டிகை 

Esther 9:18-32

ஆதார் மாதம் - 14,15ம் தேதி


எஸ்தர் 9:18-32


  1. சூசானிலுள்ள யூதரோவென்றால்அந்த மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலும்பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடிபதினைந்தாந்தேதியில் இளைப்பாறிஅதைவிருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்
  2. ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார்மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும்விருந்துண்கிற பூரிப்புமான நாளும்ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்
  3. மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதிசமீபத்திலும் தூரத்திலும் இருக்கிறஅகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,
  4. வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளையூதர் தங்கள்பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும்அவர்கள் சஞ்சலம்சந்தோஷமாகவும்அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,
  5. அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும்ஒருவருக்கொருவர் வரிசைகளைஅனுப்பவும்எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.
  6. அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்குஎழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
  7. அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன்யூதருக்கெல்லாம்சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்துஅவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும்பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.
  8. ஆனாலும் எஸ்தர்ராஜசமுகத்தில் போய்யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்தஅவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளைபிறப்பித்ததினாலேஅவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.
  9. ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டதுஅவன் அந்தநிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும்தாங்களே இந்த விஷயத்தில்அநுபவித்தவைகளினிமித்தமும்தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,
  10. யூதர் அதைத் திட்டப்படுத்திஅந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியேஅவைகளை வருஷந்தோறும்அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லைஎன்பதையும்,
  11. இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும்வம்சங்களிலும்தேசங்களிலும்ஊர்களிலும்நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும்இந்தப் பூரீம் என்னும் பண்டிகைநாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும்அவைகளை நினைவுகூருதல் தங்கள்சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும்தங்கள்மேலும்தங்கள் சந்ததியார்மேலும்தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாகநியமித்துக் கொண்டார்கள்.
  12. பூரிமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்குஅபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும்யூதனாகிய மொர்தெகாயும்பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்
  13. யூதனாகிய மொர்தெகாயும்ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும்அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள்சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமானபூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள்அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,
  14. அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லாயூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களைஅனுப்பினான்
  15. இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத்திடப்படுத்தினதுஅது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது



10.சபை கூடும் பரிசுத்த நாள் 

Leviticus 23:36

ஏத்தானீம் மாதம் - 22ம் தேதி


லேவியராகமம் 23:36


  1. ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்எட்டாம் நாள் உங்களுக்குச்சபைகூடும் பரிசுத்தநாள்அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்அதுஆசரிக்கப்படும் நாள்அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்


11.ஓய்வு நாள் 

Exodus 20:8-11

7ம் நாள்


யாத்திராகமம் 20:8-11


  1. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக
  2. ஆறுநாளும் நீ வேலைசெய்துஉன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக
  3. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்அதிலே நீயானாலும்உன்குமாரனானாலும்உன் குமாரத்தியானாலும்உன் வேலைக்காரனானாலும்உன்வேலைக்காரியானாலும்உன் மிருகஜீவனானாலும்உன் வாசல்களில் இருக்கிறஅந்நியனானாலும்யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
  4. கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ளஎல்லாவற்றையும் உண்டாக்கிஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்ஆகையால்கர்த்தர்ஓய்வுநாளை ஆசீர்வதித்துஅதைப் பரிசுத்தமாக்கினார்



12.ஓய்வு வருடம் 

Exodus 23:10,11 ; லேவியராகமம் 25:3-5

7-வருடம்


யாத்திராகமம் 23:10-11


  1. ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டுஅதின் பலனைச் சேர்த்துக்கொள்.
  2. ஏழாம் வருஷத்தில் உன் ஜனத்திலுள்ள எளியவர்கள் புசிக்கவும்மீதியானதை வெளியின்ஜெந்துக்கள் தின்னவும்அந்த நிலம் சும்மா கிடக்க விட்டுவிடுவாயாகஉன்திராட்சத்தோட்டத்தையும் உன் ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்வாயாக



லேவியராகமம் 25:3-5


  1. ஆறுவருஷம் உன் வயலை விதைத்துஉன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்துஅதின்பலனைச் சேர்ப்பாயாக
  2. ஏழாம் வருஷத்திலோகர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்அதில் உன் வயலை விதைக்காமலும்உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்
  3. தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும்கிளைகழிக்காதே விட்ட திராட்சச்செடியின்பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாகதேசத்துக்கு அது ஓய்வு வருஷமாயிருக்கக்கடவது



13.யூபிலி வருடம் 

Leviticus 25:8-55

50-வருடம்


லேவியராகமம் 25:8-55


  1. அன்றியும்ஏழு ஓய்வு வருஷங்களுள்ள ஏழு ஏழு வருஷங்களை எண்ணுவாயாகஅந்த ஏழுஓய்வு வருஷங்களும் நாற்பத்தொன்பது வருஷமாகும்
  2. அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படிசெய்யவேண்டும்பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படிசெய்யவேண்டும்.
  3. ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கிதேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலைகூறக்கடவீர்கள்அது உங்களுக்கு யூபிலி வருஷம்அதிலே உங்களில் ஒவ்வொருவனும்தன்தன் காணியாட்சிக்கும் தன்தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.
  4. அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாகஅதிலே விதைக்காமலும்தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும்கிளைகழிக்காமல் விடப்பட்டதிராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.
  5. அது யூபிலி வருஷம்அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்அந்த வருஷத்தில்வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும்
  6. அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன்தன் காணியாட்சிக்குத்திரும்பிப்போகக்கடவன்.
  7. ஆகையால்பிறனுக்கு எதையாவது விற்றாலும்அவனிடத்தில் எதையாவது கொண்டாலும்ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது.
  8. யூபிலி வருஷத்துக்குப் பின்வரும் வருஷங்களின் தொகைக்கேற்கப் பிறனிடத்தில்கொள்ளுவாயாகபலனுள்ள வருஷங்களின் தொகைக்கேற்க அவன் உனக்கு விற்பானாக.
  9. பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறபடியால்வருஷங்களின் தொகை ஏறினால் விலையேறவும்வருஷங்களின் தொகை குறைந்தால்விலை குறையவும் வேண்டும்.
  10. உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாதுஉன் தேவனுக்குப்பயப்படவேண்டும்நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
  11. என் கட்டளைகளின்படி செய்துஎன் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படிநடக்கக்கடவீர்கள்அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
  12. பூமி தன் கனியைத் தரும்நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டுஅதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
  13. ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்நாங்கள் விதைக்காமலும்விளைந்ததைச்சேர்க்காமலும் இருக்கவேண்டுமேஎன்று சொல்வீர்களானால்,
  14. நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்அதுஉங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும்.
  15. நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்துஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலேசாப்பிடுவீர்கள்அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.
  16. தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால்நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள்.
  17. உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ளஇடங்கொடுக்கக்கடவீர்கள்.
  18. உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டுதன் காணியாட்சியிலே சிலதை விற்றால்அவன் இனத்தான்ஒருவன் வந்துதன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.
  19. அதை மீட்க ஒருவனும் இல்லாமல்தானே அதை மீட்கத்தக்கவனானால்,
  20. அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளிமீந்த தொகையை ஏற்றிகொண்டவனுக்குக் கொடுத்துஅவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.
  21. அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால்அவன் விற்றதுவாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்துயூபிலி வருஷத்திலே அதுவிடுதலையாகும்அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப்போவான்.
  22. ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால்அதை விற்றஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதைமீட்டுக்கொள்ளவேண்டும்.
  23. ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால்மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ளஅந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்யூபிலி வருஷத்திலும்அது விடுதலையாகாது.
  24. மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோதேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்அவைகள் மீட்கப்படலாம்யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும்.
  25. லேவியரின் காணியாட்சியாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர் எக்காலத்திலும்மீட்டுக்கொள்ளலாம்.
  26. இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரியகாணியாட்சியானபடியால்லேவியரிடத்தில் அவனுடைய காணியாட்சிப் பட்டணத்திலுள்ளவீட்டை ஒருவன் வாங்கினால்விற்கப்பட்ட அந்த வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகும்.
  27. அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாதுஅது அவர்களுக்கு நித்தியகாணியாட்சியாயிருக்கும்
  28. உன் சகோதரன் தரித்திரப்பட்டுகையிளைத்துப்போனவனானால் அவனை ஆதரிக்கவேண்டும்பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.  
  29. நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல்உன் தேவனுக்குப் பயந்துஉன்சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக
  30. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும்உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.
  31. உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்துஉங்களுக்கு தேவனாயிருக்கும்படிஉங்களைஎகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.
  32. உன் சகோதரன் தரித்திரனாகிஉனக்கு விலைப்பட்டுப்போனால்அவனை அடிமையைப்போலஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம்.
  33. அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்துயூபிலிவருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன்.
  34. பின்புதன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகிதன் குடும்பத்தாரிடத்துக்கும் தன்பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன்.
  35. அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்ஆகையால்அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.
  36. நீ அவனைக் கொடூரமாய் ஆளாமல்உன் தேவனுக்குப் பயந்திரு.
  37. உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிறபுறஜாதிகளாயிருக்கவேண்டும்அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும்விலைக்கு வாங்கலாம்.
  38. உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும்உங்கள் தேசத்தில்உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்குஅடிமைகளைக்கொண்டுஅவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம்.
  39. அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள்அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்என்றைக்கும் அவர்கள் உங்களுக்குஅடிமைகளாயிருக்கலாம்உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர்கொடூரமாக ஆளக்கூடாது.
  40. உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்கஅவனிடத்தில் இருக்கிறஉன் சகோதரன் தரித்திரப்பட்டுஅந்தப் பரதேசிக்காவதுஅந்நியனுக்காவதுபரதேசியின்குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால்,
  41. அவன் விலைப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்அவன் சகோதரரில் ஒருவன் அவனைமீட்கலாம்.
  42. அவனுடைய பிதாவின் சகோதரனாவதுஅந்தச் சகோதரனுடைய புத்திரனாவதுஅவன்குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த இனத்தாரில் எவனாவது அவனை மீட்கலாம்தன்னால்கூடுமானால்தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்
  43. அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கியூபிலி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத்தன்னை விலைக்குக் கொண்டவனுடன் கணக்குப் பார்க்கக்கடவன்அவனுடையவிலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போலவருஷத்தொகைக்குஒத்துப்பார்க்கவேண்டும்.
  44. இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால்அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத்தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்கொடுக்கக்கடவன்.
  45. யூபிலி வருஷம்மட்டும் மீதியாயிருக்கிற வருஷங்கள் கொஞ்சமேயானால்அவனோடேகணக்குப் பார்த்துதன் வருஷங்களுக்குத்தக்கதைதன்னை மீட்கும் பொருளாகத் திரும்பக்கொடுக்கவேண்டும்.
  46. இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப் போலஅவனிடத்தில் இருக்கவேண்டும்அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய்ஆளக்கூடாது.
  47. இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால்இவனும் இவனோடுகூட இவன் பிள்ளைகளும்யூபிலி வருஷத்தில் விடுதலையாவார்கள்.
  48. இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்துபுறப்படப்பண்ணின என் ஊழியக்காரரேநான் உங்கள் தேவனாகிய கர்த்தர்



  1. ஆபிப் / நிசான்
  2. சீப்
  3. சீவான் 
  4. தம்மூஸ் 
  5. ஆப் 
  6. எலூல் 
  7. ஏத்தானீம் 
  8. பூல் 
  9. கிஸ்லேயு
  10. தேபேத்
  11. சேபாத்
  12. ஆதார் 

Bible Festivals || Richard George Muller

  Festivals https://youtu.be/N1lPUXdqkco https://youtu.be/N1lPUXdqkco 1. பஸ்கா பண்டிகை    (Exodus 12:1-14 ; Leviticus 23:5) ஆபிப்   மாதம்  -...