பக்கங்கள்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

துணிச்சல் / COURAGE @richardgeorgemuller

 துணிச்சல் / COURAGE / BOLDNESS



https://youtu.be/ADdxpZmjAoY?si=0T9B4s4jiKLE2hlp


CALEB 


அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னெயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.  தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டு வந்தேன்.  ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.  அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்.  இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.  மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள் வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.  ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான். 

யோசுவா 14:6-12





Attachment.png

JONATHAN’S  


ஒரு நாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.  சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள்.  சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும், அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்; யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள்.  யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பேர், மற்றொன்றுக்குச் சேனே என்று பேர்.  அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது.  யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம் பேரைக்கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக்கொண்டாகிலும்,இரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான் அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.  அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனுஷரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம்.  நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம்.  எங்களிடத்துக்கு ஏறி வாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான். 

1 சாமுவேல் 14:1-10


Attachment_1.png

Three brothers 


சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவுசொல்ல எங்களுக்கு அவசியமில்லை.  நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.  விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள். 

தானியேல் 3:16-18 

Attachment_2.png

புதன், 10 செப்டம்பர், 2025

ஒடுக்கப்பட்டோரை தாங்குகிறவர் BUT | @richardgeorgemuller

 ஒடுக்கப்பட்டோரை தாங்குகிறவர் BUT




https://youtu.be/1GXBi2yBvXc?si=0yID45AVZGEBXQ0a





சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்நெருக்கப்படுகிற காலங்களில் அவரேதஞ்சமானவர்

சங்கீதம் 9:9


நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டுஅவர்களை அவர்களுடைய எல்லாஉபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்

நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்துநருங்குண்டஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்

சங்கீதம் 34:17-18



குஷ்டரோகி (மத்தேயு 8:2-4)


  1. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.  
  2. இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.  
  3. இயேசு அவனை நோக்கி: “இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து” என்றார். 



* வியாதியஸ்தன் 

* எல்லாராலும் ஒதுக்கப்பட்டவன் 

(குடும்பத்தாரால் ஊரால் சபையால் ஜாதியால் ஜனத்தால்)

.

.

.

(V:2)

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். 

.

.

.

கிடைத்தது 

அர்ப்பணித்தால் அற்புதம் பெறுவாய் (v.3,4)



பாவியான பெண் (லூக்கா 7:36-50)


  1. பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.  
  2. அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,  
  3. அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.  
  4. அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.  
  5. இயேசு அவனை நோக்கி: “சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும்” என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.  
  6. அப்பொழுது அவர்: “ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
  7. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல்” என்றார். 
  8. சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: “சரியாய் நிதானித்தாய்” என்று சொல்லி,  
  9. ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: “இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர்த் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.”  
  10. நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.”  
  11. நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
  12. ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்” என்று சொல்லி;
  13. அவளை நோக்கி: “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்றார்.
  14. அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 
  15. அவர் ஸ்திரீயை நோக்கி: “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ” என்றார். 




(V-37,39)

* பாவியானஸ்திரி 

* எல்லாராலும் ஒடுக்கப்பட்டவள் 

.

.

.

(V 47)

இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே.  (அவள் செய்த காரியம் v 44-47)

.

.

.

கிடைத்தது 

பாவங்கள் மன்னிக்கப்பட்டது (V.48)

இரட்சிப்பு கிடைத்தது (V.50)

சமாதானம் பெற்றாள் (V.50)

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

🫨 Five types of sacrifices | Tamil | @richardgeorgemuller

 5 பலிகள் 




பலிகளின் நோக்கம்


*இஸ்ரவேலர்கள் தேவனுக்கு படைக்க வேண்டிய ஐந்து முக்கியமான பலிகள் உண்டு.

இவ்பலிகளை யூதர்கள் அவர்களுடைய பாவம் பரிகாரத்திற்காகவும் தேவனோடு உள்ள *உறவுபுதுப்பிப்பதற்காகவும்‌ செலுத்தி வந்தனர்.

*இப்பலிகள் கிறிஸ்துவின் மரணம் மூலம் தேவையற்றவை ஆகினான்.

*ஏனெனில் நமது பாவங்கள் கிறிஸ்துவின் பலி மரணம் மூலம் முற்றுமாக மன்னிக்கப்பட்டுதேவனோடு உள்ள உறவை சீரமைக்கப்பட்டது



பலிகள்

சர்வாங்க தகன பலி(உற்சாகமாக) LAW OF BURNT OFFERINGS

 

Levi : 1 ; 6:8-13 ; 8:18-21 ; 16:24


தேவை 

காளை, ஆட்டுக்கடா , புறா (ஏழைகளுக்காக )


நோக்கம் 

*ஒருவரின் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக

*அறியாமல் செய்த பாவத்திற்காக 


முக்கியத்துவம்

தேவனோடு ஒருவனுக்குள்ள பக்தியை வெளிப்படுத்துகிறது



போஜனபலி (உற்சாகமாக) LAW OF MEAT OFFERINGS


Levi : 2 ; 6: 14-23


தேவை

தானியம் மெல்லிய மாவு , ஒலிவ எண்ணெய் , உப்பு , தூபவர்த்தம் , புளிப்பில்லாத அப்பம்


நோக்கம்

*ஆராதிக்கவும்தேவனோடுள்ள கனத்தையும் பக்தியையும் வெளிப்படுத்துவதற்காகவும்.

*தேவனுடைய நன்மைகளையும்பராமரிப்பையும் நினைத்து செலுத்தும் பலி


முக்கியத்துவம்

நாம் எல்லோரும் தேவனுக்கு உரியவர்கள் என்பது அங்கீகரிக்கப்படுகிறது 



சமாதான பலி (உற்சாகமாக) PEACE OFFERINGS


Levi : 3 ; 7: 11-34


தேவை

மந்தையில் அல்லது தொழுவத்தில் இருந்து ஒரு மிருகம் , பல வகையான அப்பம்


நோக்கம்

*தேவனுக்கு நன்றி செலுத்த

*ஐக்கிய படுத்துதல்


முக்கியத்துவம்

தேவனோடு உள்ள ஐக்கியத்திற்கும் சமாதானத்திற்கும் அடையாளம் 




பாவ நிவாரணப் பலி (பிராயச் சித்தப்பலி) (தவிர்க்க வியலாதது) SIN OFFERINGS


Levi : 4.1 -5.13 ; 6:24-30 ; 8:14-17 ; 16:3-22


தேவை

இளங்காளை‌ ……………………………..: பிரதான ஆசாரியர்களுக்குசபை மக்களுக்கு

ஆண் ஆடு……………………..………தலைவர்களுக்கு 

பெண் ஆடு / ஆட்டுக்குட்டி ……….…….: சாதாரண மக்களுக்கு 

புறா / புறாக்குஞ்சு ………..………………: ஏழைகளுக்கு 

எப்பாவில் பத்தில் ஒரு பங்கு மாவு …..: மிக ஏழைகளுக்கு 


நோக்கம்

*மனப்பூர்வமன்றி வந்து போன அசுத்தம்கவனமின்மைஅசட்டை முதலியவற்றுக்குப் பரிகாரமாக

*சுத்திகரித்தல்


முக்கியத்துவம்

பாவம் பயங்கரமானது என்பதனை உணர்த்தவும் பாவியை தேவனோடு ஒப்புரவாகவும் 



குற்ற நிவார ணப் பலி (தவிர்க் கவியாலாதது ) THE TRESPASS OFFERINGS


Levi: 5.14-6.7 ; 7:1-6


தேவை

ஆட்டுக்கடா / ஆட்டுக்குட்டி 


நோக்கம்

*தேவனோடும் பிறரோடும் செய்த பாவத்திற்குப் பரிகாரமாகச் செலுத்த வேண்டியதுஇந்தப்பலியைத் தேவனுக்கு செலுத்துவதோடு பிழை செய்யப்பட்டவருக்கு இழப்பீடு செலுத்தவும்வேண்டும்

*சமரசமாகுதல்


முக்கியத்துவம்

பிழை செய்யப்பட்டவர் இழப்பீட்டை பெற்றுக் கொள்வார் 



பலியும் கிறிஸ்துவும் 


சர்வாங்க தகனபலி - ஒரு முழுமை பெற்ற பலியாக கிறிஸ்துவின் மரணம் காணப்படுகிறது 


போஜனபலி இயேசு - கிறிஸ்து முழுமை மனிதராக தம்மையே மனுஷருக்கு தேவனுக்கும் ஒப்புக்கொடுத்தார் 


சமாதானபலி தேவனோடு - உறவை ஏற்படுத்த ஒரு வழி இயேசு கிறிஸ்து மட்டுமே 


பாவநிவாரணபலி - கிறிஸ்துவோடு உள்ள தமது உறவை கிறிஸ்துவின் மரணம் மூலமாய் புதுப்பிக்கப்பட்டது 


குற்றநிவாரணபலி - பாவத்தின் பயங்கரமான இழப்பு, விளைவுகளை கிறிஸ்துவின் மரணம் நீக்கி விடுகிறது



Bible Festivals || Richard George Muller

  Festivals https://youtu.be/N1lPUXdqkco https://youtu.be/N1lPUXdqkco 1. பஸ்கா பண்டிகை    (Exodus 12:1-14 ; Leviticus 23:5) ஆபிப்   மாதம்  -...