லேவியராகமம்
ஆதியாகமம் - அழிந்து கொண்டிருக்கும் மனிதர்
யாத்திராகமம் - மீட்கப்பட்ட மனிதர்
லேவியராகமம் -ஆராதிக்கின்ற, கீழ்ப்படிகின்ற மனிதர்
தலைப்பு: நூற்பெயர்
எபிரெய மொழியில் பெயர் 'வய்பிக்ரா'. 'தேவன் அழைப்பு விடுக் கிறார் என்பது அதன் பொருள்.
கிரேக்க மொழி பெயர்ப்பில் லெவிற்றிக்கோன் என்றும்,
இலத்தீனில் லெவிற்றிக்கஸ் என்றும் பெயர்கள் கொடுக்கப்பட்டன.
லேவியரைப் பற்றிய நூல் என்ற பொருளில்தான் லேவியராகமம் என தமிழில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- லேவியரை மட்டும் குறிப்பிடும் நூல் அல்ல இது எல்லா தேவப் பிள்ளைகளுக் கும் தேவன் தமதுஆசாரியராகுவதற்கான அழைப்பையும் பதவியையும் அளித்துள்ளார்.
- புதிய ஏற்பாட்டில் பேதுரு வின் முதலாம் நிருபத்தில்,(நீங்களோ, உங்களைஅந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடையபுண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமானஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்இருக்கிறீர்கள். 1 பேதுரு 2:9)
ஆசிரியரும் காலமும்:
1446-1445
- மோசேயின் ஐந்தாகமங்கள் ஒன்றிற்கொன்று தொடர்புடைய தொடர் நூற்களாகும் எனவேஆதியாகம யாத்திராகம் எழுத்தாளரைப் பற்றி முன்பு சொல்லிய செய்திகள் இந்நூலுக்கும்பொருந்தும்.
- தேவன் மோசேக்கு அரு னிச் செய்தார் என்ற பொருளுடைய சொற்றொடர்கள் 56 தடவைஇந்நூலில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுள்ளன.
- மோசேயின் ஐந்தாகமங்களில் மூன்றாவது நூல் இது
பொருள்:
- இந்தப் புத்தகத்தின் ஒரு பொருள், வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் சுத்தம் மற்றும் பரிசுத்தத்திற்கான தேவை.
- நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும்பரிசுத்தராயிருப்பீர்களாக'
5 times comes
(11.44,45; 19.2; 20:7,26)
(லேவியராகமம் 11:44 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில்ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப்பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.
லேவியராகமம் 11:45 நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்துவரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.
லேவியராகமம் 19:2 நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியதுஎன்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும்பரிசுத்தராயிருங்கள்.
லேவியராகமம் 20:7 ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்; நான்உங்கள் தேவனாகிய கர்த்தர்.
லேவியராகமம் 20:26 கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்றபரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்றஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன். )
- New Testament 1 பேதுரு 1:16 நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்என்று எழுதியிருக்கிறதே.
- தேவன் பலிகள் மூலமாகவே அணுகத்தக்கவர் என்பது இன்னொரு பொருள்.(16:1-17)
- மனிதன் பாவமுள்ளவன் என்பதால் அவனுடைய பாவங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யப்பட வேண்டும். இந்தப் புத்தகம் அதிக அளவில் அடையாளப் பூர்வமானது.
- அதனுடைய அடையாளங்கள் கிறிஸ்துவையும், கிறிஸ்துவுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் உள்ள உறவையும் சுட்டிக்காட்டுகிறது.
- இந்தப் புத்தகத்திலுள்ள சில முக்கிய வார்த்தைகள் - ‘பலி’, ‘பலி செலுத்துதல்’ (பெயர்ச்சொற்களும், வினைச்சொற்களும் சுமார் 300 தடவைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன), ‘சுத்தம்’, ‘அசுத்தம்’ (130 தடவைகளுக்கும் மேலாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன), ‘பரிசுத்தம்’ (70 தடவைகள் ), ‘ஆசாரியன்’ அல்லது ஆசாரியர்கள் (170 தடவைகளுக்கும் மேலாக உபயோகிக்கப்பட்டுள்ளன).
- தேவனுக்கு முன்பாக ஜனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆசாரியர்கள் பலி செலுத்தினார்கள் மற்றும் ஆசரிப்புக் கூடாரத்தின் ஆராதனைக்குப் பொறுப்பாளர்களாகவும் இருந்தனர்.
- லேவியராகமத்தை சாதாரணமாக இரண்டு பகுதிகளாக பகுக்கலாம்
பலி சடங்குகளின் விளக்கம் (1-17)
(தேவ பிள்ளைகள் கடைபிடிக்க வேண்டிய ஐந்து வகை பலிகளின் விளக்கம்)
பரிசுத்தத்திற்காக கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள் (18-27)
(வாரம் தோறும் கடைபிடிக்க வேண்டிய ஓய்வு நாளையும் ஆண்டுதோறும் ஆசரிக்க வேண்டிய ஏழுவிழாக்களையும் பற்றிய விளக்கம்)
பொருளடக்கம்:
- மிகவும் முக்கியமான ஐந்து பலிகள் 1:1—6:7
சர்வாங்க தகனபலி 1:1-17
போஜனபலி 2:1-16
சமாதானபலி 3:1-17
பாவநிவாரணபலி 4:1—5:13
குற்றநிவாரணபலி 5:14—6:7
- தொடர்ந்து செலுத்தும் சர்வாங்க தகனபலி 6:8-13
- பலவகையான பலிகள் பற்றிய கூடுதல் போதனைகள் 6:14—7:38
- ஆசாரியர்களைப் பிரதிஷ்டை பண்ணுதல் 8:1-36
- ஆசாரியர்கள் வேலையை ஆரம்பிக்கிறார்கள் 9:1-24
- நாதாப் மற்றும் அபியூவின் மரணம் 10:1-7
- ஆசாரியர்களுக்குரிய போதனைகள் 10:8-20
- சுத்தம் மற்றும் அசுத்தம் 11:1—15:33
சுத்தம் மற்றும் அசுத்த உணவுகள் 11:1-47
பிள்ளை பெற்றபின் செய்யும் சுத்திகரிப்பு 12:1-8
தோல்வியாதிகள் குறித்த போதனைகள் 13:1-46
தோஷம் குறித்த போதனைகள் 13:47-59
தோல் வியாதிகளின் சுத்திகரிப்பு 14:1-32
தோஷங்களின் சுத்திகரிப்பு 14:33-57
சரீர வெளியேற்றங்கள் குறித்த போதனைகள் 15:1-33
- மிகப்பெரிய பாவநிவிர்த்தியின் நாள் 16:1-34
- பலி செலுத்துவதற்கான இடம் 17:1-9
- இரத்தத்தைச் சாப்பிடுவது தவிர்க்கப்பட்டது 17:10-14
- விலக்கப்பட்ட பாலியல் உறவுகள் 18:1-30
- பலவகையான சட்டங்களும், கட்டுப்பாடுகளும் 19:1—20:27
- பரிசுத்தத்தன்மை மற்றும் ஆசாரியர்களின் வேலைகள் 21:1—22:33
- தேவன் குறித்த விசேஷ காலங்கள் அல்லது பண்டிகைகள் 23:1-44
ஓய்வுநாள் 23:3
பஸ்கா மற்றும் புளிப்பில்லா அப்பப் பண்டிகை 23:4-8
அறுப்பின் பண்டிகை 23:9-14
சபைகூடும் நாள் 23:15-22
பாவநிவிர்த்தி 23:26-32
கூடாரப் பண்டிகை 23:33-44
- எண்ணெயும், அப்பமும் தேவனுக்கு முன்பாக எப்போதும் இருப்பதாக 24:1-9
- தூஷித்தலுக்கான தண்டனை 24:10-23
- ஓய்வு வருஷம் 25:1-7
- யூபிலி வருஷம் 25:8-55
- கீழ்ப்படிதலுக்கான ஆசீர்வாதங்கள் 26:1-13
- கீழ்ப்படியாமைக்கான சாபங்கள் 26:14-46
- தனி நபருக்கான பிற போதனைகள் 27:1-34
நூற்சிறப்பு
- 152 time பரிசுத்தத்தை குறித்து சொல்லப்படுள்ளது
- வேதாகமத்தின் 3- ஆம் நூல்
- அதிகாரங்கள் 27
- வசனங்கள் 859
- கேள்விகள் 3
- நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் 58
- நிறை வேறாதவை 6;
- வரலாற்று வசனங்கள் 799;
- கட்டளைகள் 795;
- வாக்குத்தத்தங்கள் 26.
- எச்சரிக்கைகள் 125.
- தேவளிடமிருந்து சிறப்புச் செய்திகள் 35.
- லேவியராகமத்தின் மையக்கருத்து வசனங்கள் லேவி. 17: 11,20:7,8