பக்கங்கள்

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

லேவியராகமம்

 லேவியராகமம் 



ஆதியாகமம் - அழிந்து கொண்டிருக்கும் மனிதர்

யாத்திராகமம் - மீட்கப்பட்ட மனிதர்

லேவியராகமம் -ஆராதிக்கின்றகீழ்ப்படிகின்ற மனிதர்


தலைப்பு: நூற்பெயர்

எபிரெய மொழியில் பெயர் 'வய்பிக்ரா'. 'தேவன் அழைப்பு விடுக் கிறார் என்பது அதன் பொருள்.

கிரேக்க மொழி பெயர்ப்பில் லெவிற்றிக்கோன் என்றும்,

இலத்தீனில் லெவிற்றிக்கஸ் என்றும் பெயர்கள் கொடுக்கப்பட்டன.

லேவியரைப் பற்றிய நூல் என்ற பொருளில்தான் லேவியராகமம் என தமிழில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

  1. லேவியரை மட்டும் குறிப்பிடும் நூல் அல்ல இது எல்லா தேவப் பிள்ளைகளுக் கும் தேவன் தமதுஆசாரியராகுவதற்கான அழைப்பையும் பதவியையும் அளித்துள்ளார்.
  2. புதிய ஏற்பாட்டில் பேதுரு வின் முதலாம் நிருபத்தில்,(நீங்களோஉங்களைஅந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடையபுண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும்ராஜரீகமானஆசாரியக்கூட்டமாயும்பரிசுத்த ஜாதியாயும்அவருக்குச் சொந்தமான ஜனமாயும்இருக்கிறீர்கள். 1 பேதுரு 2:9)


ஆசிரியரும் காலமும்: 

1446-1445


  1. மோசேயின் ஐந்தாகமங்கள் ஒன்றிற்கொன்று தொடர்புடைய தொடர் நூற்களாகும் எனவேஆதியாகம யாத்திராகம் எழுத்தாளரைப் பற்றி முன்பு சொல்லிய செய்திகள் இந்நூலுக்கும்பொருந்தும்
  2. தேவன் மோசேக்கு அரு னிச் செய்தார் என்ற பொருளுடைய சொற்றொடர்கள் 56 தடவைஇந்நூலில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுள்ளன
  3. மோசேயின் ஐந்தாகமங்களில் மூன்றாவது நூல் இது


பொருள்: 

  1. இந்தப் புத்தகத்தின் ஒரு பொருள், வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் சுத்தம் மற்றும் பரிசுத்தத்திற்கான தேவை.
  2. நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும்பரிசுத்தராயிருப்பீர்களாக'

5 times comes

(11.44,45; 19.2; 20:7,26)

(லேவியராகமம் 11:44 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்நான் பரிசுத்தர்ஆகையால்தரையில்ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல்உங்களைப்பரிசுத்தமாக்கிக்கொண்டுபரிசுத்தராயிருப்பீர்களாக.  

லேவியராகமம் 11:45 நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்துவரப்பண்ணின கர்த்தர்நான் பரிசுத்தர்ஆகையால்நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக

லேவியராகமம் 19:2 நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியதுஎன்னவென்றால்உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர்ஆகையால் நீங்களும்பரிசுத்தராயிருங்கள்

லேவியராகமம் 20:7 ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்நான்உங்கள் தேவனாகிய கர்த்தர்

லேவியராகமம் 20:26 கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்றபரிசுத்தவான்களாயிருப்பீர்களாகநீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்குஉங்களை மற்றஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன். )

  1. New Testament 1 பேதுரு 1:16 நான் பரிசுத்தர்ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்என்று எழுதியிருக்கிறதே
  2. தேவன் பலிகள் மூலமாகவே அணுகத்தக்கவர் என்பது இன்னொரு பொருள்.(16:1-17)
  3. மனிதன் பாவமுள்ளவன் என்பதால் அவனுடைய பாவங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யப்பட வேண்டும். இந்தப் புத்தகம் அதிக அளவில் அடையாளப் பூர்வமானது.
  4. அதனுடைய அடையாளங்கள் கிறிஸ்துவையும், கிறிஸ்துவுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் உள்ள உறவையும் சுட்டிக்காட்டுகிறது.
  5. இந்தப் புத்தகத்திலுள்ள சில முக்கிய வார்த்தைகள் - ‘பலி’, ‘பலி செலுத்துதல்’ (பெயர்ச்சொற்களும், வினைச்சொற்களும் சுமார் 300 தடவைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன), ‘சுத்தம்’, ‘அசுத்தம்’ (130 தடவைகளுக்கும் மேலாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன), ‘பரிசுத்தம்’ (70 தடவைகள் ), ‘ஆசாரியன்’ அல்லது ஆசாரியர்கள் (170 தடவைகளுக்கும் மேலாக உபயோகிக்கப்பட்டுள்ளன).
  6. தேவனுக்கு முன்பாக ஜனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆசாரியர்கள் பலி செலுத்தினார்கள் மற்றும் ஆசரிப்புக் கூடாரத்தின் ஆராதனைக்குப் பொறுப்பாளர்களாகவும் இருந்தனர். 
  7. லேவியராகமத்தை சாதாரணமாக இரண்டு பகுதிகளாக பகுக்கலாம்

பலி சடங்குகளின் விளக்கம் (1-17) 

(தேவ பிள்ளைகள் கடைபிடிக்க வேண்டிய ஐந்து வகை பலிகளின் விளக்கம்)

பரிசுத்தத்திற்காக கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள் (18-27)

(வாரம் தோறும் கடைபிடிக்க வேண்டிய ஓய்வு நாளையும் ஆண்டுதோறும் ஆசரிக்க வேண்டிய ஏழுவிழாக்களையும் பற்றிய விளக்கம்)



பொருளடக்கம்: 

  1. மிகவும் முக்கியமான ஐந்து பலிகள் 1:1—6:7 

சர்வாங்க தகனபலி 1:1-17

போஜனபலி 2:1-16

சமாதானபலி 3:1-17

பாவநிவாரணபலி 4:1—5:13 

குற்றநிவாரணபலி 5:14—6:7 

  1. தொடர்ந்து செலுத்தும் சர்வாங்க தகனபலி 6:8-13
  2. பலவகையான பலிகள் பற்றிய கூடுதல் போதனைகள் 6:14—7:38 
  3. ஆசாரியர்களைப் பிரதிஷ்டை பண்ணுதல் 8:1-36
  4. ஆசாரியர்கள் வேலையை ஆரம்பிக்கிறார்கள் 9:1-24
  5. நாதாப் மற்றும் அபியூவின் மரணம் 10:1-7
  6. ஆசாரியர்களுக்குரிய போதனைகள் 10:8-20
  7. சுத்தம் மற்றும் அசுத்தம் 11:1—15:33 

சுத்தம் மற்றும் அசுத்த உணவுகள் 11:1-47

பிள்ளை பெற்றபின் செய்யும் சுத்திகரிப்பு 12:1-8

தோல்வியாதிகள் குறித்த போதனைகள் 13:1-46

தோஷம் குறித்த போதனைகள் 13:47-59

தோல் வியாதிகளின் சுத்திகரிப்பு 14:1-32

தோஷங்களின் சுத்திகரிப்பு 14:33-57

சரீர வெளியேற்றங்கள் குறித்த போதனைகள் 15:1-33

  1. மிகப்பெரிய பாவநிவிர்த்தியின் நாள் 16:1-34
  2. பலி செலுத்துவதற்கான இடம் 17:1-9
  3. இரத்தத்தைச் சாப்பிடுவது தவிர்க்கப்பட்டது 17:10-14
  4. விலக்கப்பட்ட பாலியல் உறவுகள் 18:1-30
  5. பலவகையான சட்டங்களும், கட்டுப்பாடுகளும் 19:1—20:27 
  6. பரிசுத்தத்தன்மை மற்றும் ஆசாரியர்களின் வேலைகள் 21:1—22:33 
  7. தேவன் குறித்த விசேஷ காலங்கள் அல்லது பண்டிகைகள் 23:1-44

ஓய்வுநாள் 23:3

பஸ்கா மற்றும் புளிப்பில்லா அப்பப் பண்டிகை 23:4-8

அறுப்பின் பண்டிகை 23:9-14

சபைகூடும் நாள் 23:15-22

பாவநிவிர்த்தி 23:26-32

கூடாரப் பண்டிகை 23:33-44

  1. எண்ணெயும், அப்பமும் தேவனுக்கு முன்பாக எப்போதும் இருப்பதாக 24:1-9
  2. தூஷித்தலுக்கான தண்டனை 24:10-23
  3. ஓய்வு வருஷம் 25:1-7
  4. யூபிலி வருஷம் 25:8-55
  5. கீழ்ப்படிதலுக்கான ஆசீர்வாதங்கள் 26:1-13
  6. கீழ்ப்படியாமைக்கான சாபங்கள் 26:14-46
  7. தனி நபருக்கான பிற போதனைகள் 27:1-34




நூற்சிறப்பு

  1. 152 time பரிசுத்தத்தை குறித்து சொல்லப்படுள்ளது
  2. வேதாகமத்தின் 3- ஆம் நூல்
  3. அதிகாரங்கள் 27
  4. வசனங்கள் 859
  5. கேள்விகள் 3
  6. நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் 58
  7. நிறை வேறாதவை 6;
  8. வரலாற்று வசனங்கள் 799; 
  9. கட்டளைகள் 795; 
  10. வாக்குத்தத்தங்கள் 26. 
  11. எச்சரிக்கைகள் 125. 
  12. தேவளிடமிருந்து சிறப்புச் செய்திகள் 35.
  13. லேவியராகமத்தின் மையக்கருத்து வசனங்கள் லேவி. 17: 11,20:7,8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bible Festivals || Richard George Muller

  Festivals https://youtu.be/N1lPUXdqkco https://youtu.be/N1lPUXdqkco 1. பஸ்கா பண்டிகை    (Exodus 12:1-14 ; Leviticus 23:5) ஆபிப்   மாதம்  -...