பக்கங்கள்

செவ்வாய், 21 அக்டோபர், 2025

பாளயம், பிராகாரம், ஆசரிப்புக் கூடாரம்

 பாளயம்பிராகாரம்ஆசரிப்புக் கூடாரம்



https://youtu.be/6Uaq7jaTftM


பாளயம்:



*கானான் பயண வழியில் இஸ்ரவேலர்கள் ஆங்காங்கு வனாந்தரத்தில் கூடாரமடித்துத் தங்கியஇடங்களே பாளயம் 40 ஆண்டு பரதேசப்பயணத்தின் போது 41 இடங்களில் பாளயமிறங்கியதாகஎண்ணாகமம் 33-ல் வாசிக்கி றோம்.

*பெண்களும் குழந்தைகளுமாக சேர்த்து ஏறக்குறைய 15 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களும்அவர்களது கால்நடைகளும் தங்க சுமார் 6 கி.மீ நீளமும் 6 கி.மீ அகலமும் கொண்ட பாளயம்தேவைப்பட்டது.

*பாளயத்தின் வெளிச்சத்துக்காக இரவில் அக்கினித் தூணையும்நிழலுக்காக பகலில்மேகத்தூணையும் தேவன் நிறுத்தியிருந்தார்.


பிராகாரம்:


*ஆசரிப்புக்கூடாரத்தைத் தன்னுள்ளே கொண்டது பிராகாரம்.

*ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றிலும் 100 முழம் நீளமும் 50 முழம் அகலமும் கொண்டவேறுபிரிக்கப்பட்ட இடம். 60 தூண்கள் சுற்றிலும் நாட்டப் பட்டு அவற்றில் 5 முழம் உயரத்தில்வெள்ளைத் திரை தொங்கவிடப்பட்டிருக்கும்.

*பிராகாரத்தின் உள்ளே நுழைய கிழக்குப் பகுதியில் ஒரே ஒரு வாசல் மட்டுமே உண்டு.

*நீலநூல்சிவப்புநூல்இரத்தாம்பரம்திரித்த பஞ்சு நூல் ஆகியவற்றால் வாசலுக்கான திரைஉண்டாக்கப்பட்டிருந்தது.

*பிராகாரத்தின் உள்ளே பலிபீடம்வெண்கலத் தொட்டிஆகிய இரண்டு பொருட்கள் மட்டுமே உண்டு.

*பலிபீடத்தின் மீது கர்த்தருடைய சன்னிதியிலிருந்து இறங்கிய தீ எப்போதும் எரிந்துகொண்டிருக்கும்.


*பலிபீடம் கிறிஸ்துவின் பலிமரணத்தைச் சுட்டுகிறது.

*பெண்களின் உற்சாக காணிக்கையான வெண்கலக் கண்ணாடிகளால் உருக்கி உருவாக்கப்பட்டதுவெண்கலத் தொட்டி (யாத் 38:8) இதனை கண்ணாடிக் கடல் என்றும் அழைப்பர்.

*பிராகாரத்தின் பலிபீடத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக் கும் இடையில் இந்த வெண்கலத் தொட்டிவைக்கப்பட்டிருந்தது.

*இந்தத் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டி ருக்கும் இந்தத் தண்ணீரில் கால்கரங்களைக் கழுவியபின்னரே ஆசாரியர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளே சென்று ஊழியத்தை நிறைவேற்றவேண்டும்.

*பலிபீடம் கர்த்தரின் மீட்புப் பலிமரணத்தைக் காட்டும்போது அவ ரது பரிசுத்தமாக்குதல் பணியைஇந்தத் தொட்டி சுட்டுகிறது

*இத்தொட்டியின் தண்ணீர் பரிசுத்த ஆவியானவ ருக்கு நிழல்.

*தண்ணீர் தூய்மைப் படுத்துதலுக்கு உதவுவதைப் போல ஆவியானவர் நமது குறைகளை நமக்குஉணர்த்தி தூய்மைப்பட உதவுகிறார். (ரோம 15:15)


ஆசரிப்புக் கூடாரம் : 


*பாளயத்தின் நடுப்பகுதியில் இந்தக் கூடாரம் அமைந்திருந்தது.

*இதன் முன் காணப்பட்ட பலிபீடத்தில் எப்போதும் அக்கினி எரிந்து கொண்டிருந்ததுஇஸ்ரவேலர்ஒருவர் தேவனை ஆராதிக்க எங்காவது செல்லவோ ஏதாவது குறிப்பிட்ட நேரத்துக்காகக்காத்திருக்கவோ வேண்டியதில்லை. “ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்து கொண்டார்கள்" (யாத் 33: 10), என வாசிக்கி றோம்

*ஆசரிப்புக் கூடாரம் இரு அறைகளைக் கொண்டதுஇருஅறைகளையும் பிரிக்கும் சுவராக ஒருதிரைச் சீலை தொங்கிக் கொண்டிருக்கும்

*முதல் அறை பரிசுத்த ஸ்தலம் (தூயகம்என்றும் இரண்டாம் அறை மகா பரிசுத்த ஸ்தலம்(திருத்தூயகம் ) என்றும் அழைக்கப்படும்.

*பரிசுத்த ஸ்தலத்தில் சமுகத்தப்பம் வைக்கும் | மேசை குத்து விளக்குபொன் தூபபீடம் ஆகியவைவைக்கப்பட்டிருக்கும்தூபபீடத்தின் மேல்சுகந்த வர்க்கங் களைப் புகைத்தல்குத்து விளக்கைச்சுத்தப்படுத்தி எரியவைத்தல்ஓய்வு நாள் தோறும் சமுகத்தப்பம் மாற்றி வைத்தல் ஆகியவற்றைச்செய்கின்ற ஆசாரியர்கள் இந்தப் பரிசுத்த ஸ்தலம் வரை மட்டுமே வரவேண்டும்.

*மகா பரிசுத்த ஸ்தலத்தில் அவர்கள் நுழையக் கூடாதுமகாபரிசுத்த ஸ்தலத்தில் சாட்சிப்பெட்டியும்கிருபாசனமும் காணப்படுகிறதுசாட்சிப்பெட்டி என்பது ஒரு பெட்டியும்அதனை மூடும் பலகைகிருபாசனமுமாகும்அந்த மூடுபலகையான கிருபாசனம் கர்த்தரின் சிங்காசனமான இருப்பிடமாகமதிக்கப்பட்டதுஇந்தச் சிங்காசனத்த இங்கு ஆண்டில் ஒரு தடவை அதாவதுஏழாம் மாதத்தின்பத்தாம் தேதி மட்டும் பிரதான ஆசாரியன் பிரவே படும் அமைதியண்டுகாஅன்று இஸ்ரவேலர்அறிந்தும் அறியாமலும்செய்த எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும் ( லேவி 16 அதிகாரம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bible Festivals || Richard George Muller

  Festivals https://youtu.be/N1lPUXdqkco https://youtu.be/N1lPUXdqkco 1. பஸ்கா பண்டிகை    (Exodus 12:1-14 ; Leviticus 23:5) ஆபிப்   மாதம்  -...